ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த அந்தப் பாடல் யு டியுப் தளத்தில் 59 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் விஜய் இன்று(ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக இந்த படத்திலிருந்து முன்னோட்ட வீடியோ ஒன்று நேற்று நள்ளிரவில் வெளியாகி டிரெண்ட் ஆனது. தொடர்ந்து படத்திலிருந்து “சின்ன சின்ன கண்கள்..” என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.
கபிலன் வைரமுத்து எழுதி உள்ள இந்த பாடலை விஜய்யும், மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியும் பாடி உள்ளனர். பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. விஜய், சினேகா இடையேயான காதல் பாடலாக இது அமைந்துள்ளது.
பாடல் லிங்க் : https://www.youtube.com/watch?v=4P_k0rqmyX8